உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து 27,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 27,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீர், குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வ-ரத்து நேற்று மாலை வினாடிக்கு, 27,000 கன அடியாக சரிந்துள்-ளது. கர்நாடக, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்-டியா, குடகு, ஹாசன், வயநாடு, உள்ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வ-ரத்து அதிகரித்துள்ளது. அணை பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது நீர்வரத்துக்கு ஏற்ப அதிகரிப்-பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த, 2 நாட்களுக்கு முன், கர்நா-டக அணைகளில் இருந்து, 36,299 திறக்கப்பட்ட நிலையில், நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 25,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து வினாடிக்கு, 34,475 கன அடி என மொத்தம், 59,475 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்-பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்-டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 53,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 27,000 கன அடியாக சரிந்தது. அதிக நீர்வரத்தால், ஒகேனக்கல் மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து, 9 வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை