உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாணியாற்றில் நீர்வரத்து

வாணியாற்றில் நீர்வரத்து

அரூர், சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில், ஏற்காட்டுக்கு அருகே உற்பத்தியாகும் வாணியாறு, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில் உள்ள வாணியாறு அணையை அடைகிறது. பின், 55 கி.மீ., துாரம் பயணித்து, தர்மபுரி மாவட்ட எல்லையான கைலாயபுரம் வேடியப்பன் கோவில் பகுதியில் உள்ள, தென்பெண்ணையாற்றில் கலக்கிறது.இந்நிலையில், தொடர்மழையால் கடந்த, 24ல், வாணியாறு அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், அணை நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும், உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பறையப்பட்டி புதுார் ஏரிக்கு தண்ணீர் செல்வதுடன், வாணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. மேலும், நேற்று முன்தினம் முதல், அரூர் வாணியாற்றில், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ