உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 902 கன அடி நீர்வரத்து இருந்தது.நீர்பிடிப்பு பகுதியில் திடீரென மிதமான மழை பெய்ததால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 987 கன அடியாக அதிகரித்-தது.அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.51 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 899 கன அடி, வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடி என மொத்தம், 987 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றில் ரசாயன நுரையுடன் உபரி நீர் வெளியேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை