உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து, மாவட்டத்தில் பெய்த மழையால் நேற்று முன்தினம், 503 கன அடியாகவும், நேற்று, 563 கன அடியாக வும் அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசன கால்வாயில், 101 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 462 கன அடி என, அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில், நேற்று, 49.45 அடியாக இருந்தது. கிருஷ்ணகிரியில் கடந்த, 2 நாட்களாக, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ