உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்துறை விரிவுரையாளர் ஜஸ்டினா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்து, முதலாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு, மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து விளக்கி கூறினார். கல்லுாரி துறை தலைவர்கள் சரளா நான்சி மேரி மற்றும் ஆசிரியர்கள் கார்த்திக், சுந்தரம், தினேஷ் பாபு ஆகியோர், மாணவ, மாணவியருக்கு பல்வேறு கல்வி சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர். முதலாமாண்டு துறைத்தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை