கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கே.ஆர்.பி., அணை பகுதியில், 67.60 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கெலவரப்பள்ளி, 54.20, பாம்பாறு அணை, 37, தேன்கனிக்கோடடை, 35, ஓசூர், 33.10, ராயக்கோட்டை, 33, கிருஷ்ணகிரி, 23.40, பெனுகொண்டாபுரம், 22.20, சூளகிரி, 20, சின்னாறு அணை, 18, போச்சம்பள்ளி, 17.70, பாரூர், 17.40, ஊத்தங்கரை, 11, அஞ்செட்டி, 6.40, நெடுங்கல், 6, தளி, 5 என மொத்தம், 407 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.பாரூர் பெரிய ஏரிக்கு, தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றின் மூலம் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், ஏரியின் உயரமான, 15.60 அடியில் தற்போது, 14 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. விரைவில் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.