உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விரைவில் இ.பி.எஸ்., திகார் சிறைக்கு செல்வார்: பன்னீர்செல்வம் பேட்டி

விரைவில் இ.பி.எஸ்., திகார் சிறைக்கு செல்வார்: பன்னீர்செல்வம் பேட்டி

கிருஷ்ணகிரி: '' இ.பி.எஸ்., விரைவில் திகார் சிறைக்கு செல்வார் என்று பேசியது குறித்து விளக்கமாக சொல்ல முடியாது. அது ரகசியம்; சரியான நேரத்தில், சொல்லும் இடத்தில் சொல்வேன்'' என கிருஷ்ணகிரியில் நிருபர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும், அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை உருவாக்கிய போது அடிப்படை தொண்டர்களும் பொதுச்செயலாளர் ஆகும் வகையில் பல்வேறு சட்டவிதிகளை வகுத்தார். அவற்றை தகர்த்து, அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்து இ.பி.எஸ்., அ.தி.மு.க., பொதுச்செயலாளராகி உள்ளார். அதை எதிர்த்து தொண்டர்கள் சார்பில் அ.தி.மு.க., மீட்புகுழு கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துகிறோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4rjr3rz1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இரு அணிகளாக செயல்பட்டு ஓட்டுக்களை உடைப்பதால் தான் அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடியவில்லை. இ.பி.எஸ்., முதல்வராகி, பொதுச்செயலாளர் ஆன பின் அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளார். அ.தி.மு.க.,வின் பல பிரிவுகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும். ஏற்கனவே டி.டி.வி., தினகரனுடன் இணைந்து விட்டோம். கொள்கை ரீதியாக அவர்கள் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். நாங்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். சசிகலாவும் எங்களுடன் இணைந்து செயல்படவுள்ளார். அதை அவரே விரைவில் அறிவிப்பார். நம்பிக்கை துரோகிகள் யார் என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் கட்சியின் நலனுக்காக இணைந்து செயல்பட தயார்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதிமன்றம் இ.பி.எஸ்., ஆஜராக வேண்டும் எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக்கூறியதையும் வரவேற்கிறோம். லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. இது குறித்து முதலில் செய்தியாளர்களுக்கு தான் சொல்வோம். இ.பி.எஸ்., விரைவில் திகார் சிறைக்கு செல்வார் என்று பேசியது குறித்து விளக்கமாக சொல்ல முடியாது. அது ரகசியம்; சரியான நேரத்தில், சொல்லும் இடத்தில் சொல்வேன். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ravi
ஜன 08, 2024 09:01

மத்திய அரசு கேஸ்ல எதாவது மாட்டினால் தான் திகரில் போடுவார்கள் EPS மேல முதலில் மாநில அரசு ஏதாவது கேஸ் போட வேண்டும். அதை வைத்து தான் ED வரமுடியும்.. இபோ இருக்கும் விடிய அரசு அப்படி ஏதும் செய்ய வக்கு இல்லை அப்புறம் எங்க திகார் போவது


spr
ஜன 08, 2024 05:33

"இரு அணிகளாக செயல்பட்டு ஓட்டுக்களை உடைப்பதால் தான் அ.தி.மு.க.,வால் வெற்றி பெற முடியவில்லை." இதனால் வெற்றி பெறப்போவது திமுக என்ற இந்த உண்மையை அறிந்தும் இந்த முட்டாள்கள் இன்னமும் திருந்தவில்லையே ஒருவறையொருவர் காட்டிக் கொடுத்து அழிந்து போவார்கள் கட்சியையும் அழிக்கிறார்கள்.


Ramesh Sargam
ஜன 08, 2024 01:02

அவரை திஹாருக்கு அனுப்பிவிட்டு நீங்கள் சும்மா இருந்துவிட முடியாது. உங்கள் மீது அவர் ஏதாவது குற்றம் சுமத்தி, உங்களையும் துணைக்கு அழைத்து செல்வார் அவர். அப்புறம் அவர் 'கைதி', நீங்கள் எப்பொழுதும்போல் 'துணை' கைதி


Krishnaswame Krishnaswame
ஜன 07, 2024 18:42

Ops தர்மயுத்தம் எனும் கோமாளித்தனத்தை எதற்காக அரங்கேற்றினார்??? முந்தைய காலகட்டத்தில் டிடிவி மற்றும் சசி யுடன் தகராறு ஏற்பட என்ன காரணம்? இவர் உத்தமர் என்றால் தேனி மாவட்டத்தில் பணம் செலவு செய்யாமல் ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றிபெற முடியுமா? இவர் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சபரீசனை பொதுவெளியில் (கிரிக்கெட் மைதானத்தில்) சந்தித்தாரே அம்மா இருந்திருந்தால்? சரி அந்த சந்திப்பிற்கு பின்னனியில் உள்ள ரகசியம் என்ன?இவரது மகன்கள் அரசியல் பின்புலத்தில் செய்யும் துஷ்பிரயோகங்கள்?? இவரின் சொத்து மதிப்பு மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு வெளியிடுவாரா?


Kumar
ஜன 08, 2024 05:27

கிருஷ்ணஸ்வாமி சரியாக சொல்லுகின்றார்.வாழ்த்துக்கள்


Raja Vardhini
ஜன 07, 2024 18:35

இவ்வளவு அவமானப்பட்டும் இன்னும் திருந்தலையே...


PV, முத்தூர்
ஜன 07, 2024 17:48

சசிகலாவை எதிர்து தர்மயுத்தம் நடத்தியதைபற்றி வாய் திறக்கலாமே. ஒருவேளை, நீங்கள் கட்சியை வென்றிருந்தால், இந்நேரம் அதை மீண்டும் சசிகலாவிடம் ஒப்படைத்திர்ப்பிர்கள்.


அப்புசாமி
ஜன 07, 2024 17:44

என்னை கட்சில சேத்துக்கிட்டா போக மாட்டார்.


Seshan Thirumaliruncholai
ஜன 07, 2024 17:07

சிறைக்கு சென்றாலும் பொது செயலர்தான். சிறைக்கு சென்றாலும் அமைச்சராக தொடரமுடிகிறது. பாம்பின் காலை பாம்புதான் அறியும்.


V GOPALAN
ஜன 07, 2024 16:49

Correct even in and around Salem EPS do not have vote share. This I'm Edapadi itself EPS ADMK will loose


Palanisamy Sekar
ஜன 07, 2024 16:24

ஜெ அவர்களின் நூறாண்டுகளுக்கு அதிமுகவின் மக்கள் சேவை தொடரும் என்கிற ஆசையில் நீங்கள் இருவருமே ஒன்றுசேர்ந்து மண்ணள்ளிப்போட்டுவிட்டீர்களே. உங்களின் பதவி பேராசையும் அவரது நம்பிக்கை துரோகமும் ஒன்று சேர்ந்து என்போன்றவர்களுக்கு பாஜவுக்காக மோடிக்காக பணியாற்ற சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி கொடுத்தீர்கள்


Barakat Ali
ஜன 07, 2024 16:56

தனக்குப் பின்னர் கட்சி சிதறுண்டு போகும் என்று ஊகித்திருப்பார் .....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை