உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்

சீரான குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்

ஓசூர்: ஓசூரில், சீரான குடிநீர் கேட்டு, பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 24வது வார்டுக்கு உட்பட்ட ராம்நகரில் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த, 35க்கும் மேற்பட்ட பெண்கள், ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே உள்ள ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன், நேற்று காலை காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், ஓசூர் இருந்து தளி நோக்கி சென்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால், மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி