உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்களுக்கு பட்டா வழங்குவேன் தி.மு.க., வேட்பாளர் தமிழ்ச்செல்வன் உறுதி

மக்களுக்கு பட்டா வழங்குவேன் தி.மு.க., வேட்பாளர் தமிழ்ச்செல்வன் உறுதி

மதுரை : மதுரை மாநகராட்சி 47வது வார்டு(ரிசர்வ்லைன்) தி.மு.க., வேட்பாளர் பி.தமிழ்ச்செல்வம், சட்டம் படித்த இவர் இந்த வார்டு வட்ட செயலாளராகவும் உள்ளார். அவர் கூறியதாவது :எனது தந்தை வீ.மு. பாலகிருஷ்ணன் இந்த வார்டு வட்ட செயலாளராக இருந்து பல உதவிகள் செய்தார். நானும் செய்து கொண்டிருக்கிறேன். ஜவஹர்புரம், காலாங்கரை பகுதி மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. கோர்ட்டில் உள்ள இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு உடனடியாக பெற்றுத்தருவேன்.அனைத்து தரப்பு மக்களுக்கும் முதியோர் உதவித்தொகை உட்பட நலத்திட்ட உதவிகள் வாங்கித்தரப்படும். அனைத்து பகுதிகளிலும் குடிநீர், தெருவிளக்கு வசதி செய்து தரப்படும். இளைஞர்களுக்கு ஜிம் வசதி, ஏழை குழந்தைகளுக்க மாலை நேர கல்வி மையம் அமைத்து தருவேன். டி.ஆர்.ஓ., காலனி, டீன் மற்றும் பொதுப்பணித்துறை குடியிருப்பு, ஆயுதப்படை குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுத் தருவேன். காலாங்கரை பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்றி சீரமைப்பேன். இப்பகுதி முழுமைக்கும் குடிநீர் இணைப்பு பெற்றுத்தருவேன். சமுதாயக்கூடம், நூலகம் மற்றும் பொதுகழிப்பறை கட்டித்தரப்படும். தண்ணீர்தொட்டி சீரமைக்கப்படும். மருதுபாண்டியர் தெரு உட்பட அரைகுறையாக உள்ள அனைத்து இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் முழுமைப்படுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை