உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு

விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு

மதுரை : மதுரையில் விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.6.90 லட்சம் நஷ்டஈடு வழங்க முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட், ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டது.செல்லூரை சேர்ந்தவர் சலீம். சம்பவத்தன்று இவர் மைத்துனர் அப்துல் மஜித்துடன் பைக்கில் மாட்டுத்தாவணியில் இருந்து மேலூர் நோக்கி சென்றார். எதிரே வந்த லாரி மோதி இருவரும் காயமுற்றனர். சலீம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி லாரி உரிமையாளர் மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி மீது முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்களுக்கு ரூ.6.90 லட்சம் நஷ்டஈடு வழங்க ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நீதிபதி ராஜசேகரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ