உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊராட்சிகளில் தாமதமாகும் பாரத் நெட் : பணிகள் சுணக்கம்

ஊராட்சிகளில் தாமதமாகும் பாரத் நெட் : பணிகள் சுணக்கம்

பேரையூர்: டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கு பாரத் நெட் திட்டத்தில் கேபிள் வந்தும் இன்டர்நெட் இணைப்பு கொடுக்க தாமதம் ஆவதால் ஊராட்சி பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.அனைத்து மாநிலங்களிலும் கிராம ஊராட்சிகளை இணைத்து அரசின் சேவைகளை இணையதளம் வாயிலாக மக்கள் பெற வசதியாக பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் கண்ணாடி இழை கம்பி வடம் (ஆப்டிகல் பைபர்) மூலம் இணைத்து இணையதளம் வழியாக அரசின் சேவைகள் அளிக்கப்பட உள்ளது.இத்திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரு ஜிபி அளவிலான அலைக்கற்றை வழங்கப்படும். பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் மின்னணு சேவை அளிக்கப்படும். டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் இத்திட்டத்தில் கேபிள் கொண்டு செல்லப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை இணைப்பு கொடுக்கவில்லை.இதனால் இன்டர்நெட் வசதிகளை பெற ஊராட்சி நிர்வாகத்தினர் சிரமப்படுகின்றனர். இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் மகளிர் சுய உதவி குழுவுக்காக கட்டிய கட்டடங்கள் வீணாகின்றன. ஊராட்சி செயலாளர்களோ சொந்த அலைபேசியில் இன்டர்நெட் இணைப்பை பெற்று பணிகளை மேற்கொள்கின்றனர். டவர் வசதி இல்லாத ஊராட்சிகளில் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. ஊராட்சிகளுக்கு உடனடியாக 'பாரத் நெட்' இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை