உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 78 மரக்கன்று நட்டு மாணவர் விழிப்புணர்வு

78 மரக்கன்று நட்டு மாணவர் விழிப்புணர்வு

மதுரை : மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தீஸ் 10. தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெப்பக்குளம் வைகை கரை பகுதியில் இருந்து விரகனுார் ரிங் ரோடு வரை 78 அரளிச்செடி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.அவர் கூறியதாவது: தந்தை சுரேஷ்குமார் உள்ளிட்டோரின் ஊக்குவிப்பால் இந்த முயற்சியை மேற்கொண்டேன். மரங்களே ஆக்சிஜன் கொடுக்கின்றன. என் ஆசை, மதுரையை கேரளா போல பசுமையாக மாற்ற வேண்டும். முதலில் புங்கை மரக்கன்று வைப்பதாக இருந்தது. வேப்பமரம், புளியமரம், புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் இப்பகுதியில் வைத்தால் வேர் ஆழமாக சென்று ரோடு விரிவாக்கத்திற்கு இடையூறு ஏற்படும் எனக்கூறி நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதிக்கவில்லை. எனவே அரளிச் செடிக் கன்றுளை நட்டேன் என்றார்.சகோதரி தனுஷ்கா 13, கடந்த ஆண்டு சேமிப்பு நிதி ரூ.7 ஆயிரத்து 999 ஐ ராணுவ நிதியாக கலெக்டர் சங்கீதாவிடம் வழங்கினார். இந்தாண்டும் ரூ.35 ஆயிரத்தை வழங்க உள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை