உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பத்தாண்டுகளாக விடிவு இல்லாத நகர்

பத்தாண்டுகளாக விடிவு இல்லாத நகர்

டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் பல நகர் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் தெரு விளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இங்குள்ள ராம் நகர், ராமுண்ணி நகர், பாலாஜி நகர், பாண்டியன் நகர், எம்.ஆர். நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்புகள் வந்து விட்டன. இதுவரை தெருவிளக்கு வசதி செய்து தரப்படாததால் இப்பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இதை பயன்படுத்தி அடிக்கடி திருட்டுக்கள் நடக்கின்றன. இத் தெருக்கள் இருளில் இருப்பதால் மாலை 6:00 மணிக்கு மேல் குடியிருப்போர் வீட்டுக்குள் முடங்கி விடுகின்றனர். வீடு தேடிச் சென்று வரி வசூல் செய்யும் பேரூராட்சியினர், அவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர மறுப்பது ஏனென்று தெரியவில்லை என இப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !