| ADDED : ஏப் 04, 2024 05:10 AM
ரோடு வசதி வேண்டும்மதுரை கே.புதுார் கொடி காத்த குமரன் தெருவில் ரோடு அமைக்க கொட்டிய மணல், ஜல்லிக் கற்கள் இரண்டு மாதங்களாக தெருவையே அடைத்துக் கொண்டிருக்கிறது. ரோடு அமைக்கும் பணிகள் தாமதமாவதால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரவீந்திரன், கே.புதுார்.தேங்கும் கழிவுநீர்மதுரை கோமதிபுரம் கண்ணன் தெருவில் காலி மனையில் ஒரு மாதமாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் ரோட்டில் நிரம்பி வழிவதால் நடக்க முடியவில்லை. சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சித்து, கோமதிபுரம்.ரோடு சீரமைக்க வேண்டும்மதுரை வார்டு எண் 67 ல் தெற்கு மாரட் வீதி அருகே மஞ்சணக்கார தெரு ரோடு படுமோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பல முறை புகார் அளித்தும் பயனில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அஷோக், தெற்கு மாரட் வீதி.ரதத்தை சுத்தப்படுத்துங்கமதுரை சித்திரைத் திருவிழா தொடங்க உள்ள நிலையில், கிழக்கு மாசி வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேரை தண்ணீரால் சுத்தம் செய்யாமலேயே தயார் படுத்துகின்றனர். கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தும் பலனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மீனாட்சி சுந்தரம், கீழமாசிவீதி.குண்டும் குழியுமான ரோடு மதுரை கோமதிபுரம் ஆறாவது மெயின் ரோட்டில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை அமைக்க தோண்டிய ரோடுகளை சரிவர மூடவில்லை. இதனால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். அதிகாரிகள் தரமான ரோடு அமைக்க வேண்டும்.- அஜ்மல்கான், கோமதிபுரம்.