| ADDED : ஜூலை 01, 2024 05:43 AM
உசிலம்பட்டி : சேலத்தில் தமிழ்நாடு டேக் வாண்டோ சங்கம் சார்பில் தேசிய அளவிலான போட்டிகள் நடந்தது.18 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இதில் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளி மாணவர் ஹரிதேவன் சப்-ஜூனியர் 20 கிலோ எடை பிரிவில் முதலிடம், மெட்ரிக் பள்ளி மாணவி பத்மப்ரியா மஹி சப் - ஜூனியர் 32 கிலோ எடைபிரிவில் இரண்டாமிடம் பெற்றனர்.ஜெயசீலன் பள்ளி மாணவர் திவான் 50 கிலோ எடைபிரிவில் இரண்டாமிடம், 28 கிலோ எடைபிரிவில் அகஸ்தியா மூன்றாமிடம் பெற்றனர். ஆர்.சி., பள்ளி மாணவர் பிரதிக் சப்-ஜூனியர் 26 கிலோ எடைபிரிவில் மூன்றாமிடம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி மாணவி சரிதா ஜூனியர் 63 கிலோ எடைபிரிவில் இரண்டாமிடம் பெற்றனர்.கருப்பு பட்டை பிரிவில் முதலிடம் பெற்றவர்கள் ஆசிய போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். வென்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் யுவராஜா, நடராஜன், ராஜமாணிக்கம் பாராட்டினர்.