உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதைப்பொருள் எதிர்ப்பு தின ஊர்வலம்

போதைப்பொருள் எதிர்ப்பு தின ஊர்வலம்

மதுரை, : உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரையில் பள்ளி, கல்லுாரி, போலீஸ் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) மாணவர்களை ஆற்றுப்படுத்தும் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினவிழா நடந்தது. முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். துணை முதல்வர் குருபாஸ்கர் வரவேற்றார். திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் பேசினார். மாணவர்களை ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சிக் குழு, ராகிங், போதைத் தடுப்பு குழுவினர் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். டீன் பிரியா நன்றி கூறினார்.கூடல்புதுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் ஏற்பாட்டில் பள்ளி மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை உதவிகமிஷனர் ஜமால் தலைமையில் துணைகமிஷனர் மதுகுமாரி துவக்கி வைத்தார். மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் போதைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி தலைமை வகித்தார். இணை பேராசிரியர் வேணுகா முன்னிலை வகித்தார். பேராசிரியர் செல்வத்தரசி வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காசி, சேதுமணி மாதவன் பேசினர். சிறந்த கவிதைகள் எழுதிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள் பதாகைகள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். பேராசிரியர் கோகிலா நன்றி கூறினார். என்.எஸ்.எஸ்., திட்ட இணை பேராசிரியர் பூங்கோதை, உதவி பேராசிரியர் நேருஜி ஒருங்கிணைத்தனர்.ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் திவ்யநாதன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்.ஐ., ஜெயக்குமார், போலீசார் பங்கேற்றனர். மாணவர்கள் ஊர்வலம் நடந்தது. ஆசிரியர்கள் சரவணன், கண்ணன், முரளிதரன், ராணி, ராஜேஸ்வரி, சகாயராணி, மாணிக்கவல்லி, அருணா ராமநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். புதுார் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை வகித்தார். போலீஸ் உதவி கமிஷனர் கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், எஸ்.ஐ.,க்கள் புலிக்குட்டி அய்யனார், சீயோன் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தனர்.

மேலுார்

மேலுாரில் மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து அரசு இருபாலர் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். டி.எஸ்.பி., சிவசுப்பு தலைமை வகித்தார். மாணவர்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாடிப்பட்டி

டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். வாடிப்பட்டி எஸ்.ஐ., கணேஷ்குமார், போலீஸ் குணசேகரன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேச்சு,கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போலீசார் சார்பில் நடந்த ஊர்வலத்தில் டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, தலைமை ஆசிரியர் பரமசிவம், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் மாரியப்பன், எஸ்.ஐ., செல்லச்சாமி, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

திருமங்கலம்

பி.கே.என்., பள்ளியில் இருந்து கிளம்பிய ஊர்வலத்தை டி.எஸ்.பி., அருள் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி லதா, அருண், எஸ்.ஐ.,க்கள் ஜெயக்குமார், பரமசிவம், கருணாகரன், மற்றும் போலீசார், பி.கே.என்., பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பி.கே.என்., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். ஏ.டி.எஸ்.பி., ராமலிங்கம் தலைமை வகித்தார். ஊர்வலத்தை மதுவிலக்கு டி.எஸ்.பி., சிவசுப்பு தொடங்கி வைத்தார். கல்லுாரி தலைவர் தினேஷ், செயலாளர் மோகன், பொருளாளர் மணிசங்கர் முன்னிலை வகித்தனர். முதல்வர் கணேசன் வரவேற்றார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் பிரதீப் குமார், நாகலட்சுமி, சங்கிலி கருப்பையா கலந்து கொண்டனர்.கள்ளிக்குடி தாலுகா செங்கப்படையில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் தொடங்கி வைத்தார். எஸ்.ஐ., பேச்சி முத்துப்பாண்டி மற்றும் போலீசார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை