உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண் இன்ஸ்பெக்டருக்கு ஜாமின்

பெண் இன்ஸ்பெக்டருக்கு ஜாமின்

மதுரை: மதுரை அலங்காநல்லுார் அருகேயுள்ள வலசை நெடுங்குளத்தை சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:புதுக்கோட்டையில் போக்சோ வழக்கை விசாரித்து முடிக்க குற்றம் சாட்டப்பட்டவரிடம் நான் பணம் பெற்றதாகவும், வழக்கை முடிக்காததால் குற்றம் சாட்டப்பட்டவர் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய் வழக்கு. என் மீது தவறாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போக்சோ வழக்கை விசாரிக்க எனக்கு அதிகாரம் இல்லை. டி.எஸ்.பி.,க்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இம்மனுவை நீதிபதி நக்கீரன் விசாரித்தார். மனு தொடர்பாக புதுக்கோட்டை சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி