உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாய்கள் ஜாக்கிரதை! மதுரையில் கருத்தடை செய்ய உத்தரவு; கூடுதல் டாக்டர்கள் பணி நியமனம்

நாய்கள் ஜாக்கிரதை! மதுரையில் கருத்தடை செய்ய உத்தரவு; கூடுதல் டாக்டர்கள் பணி நியமனம்

மதுரை : மதுரையில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய கூடுதலாக கால்நடை டாக்டர்களை பணியில் ஈடுபடுத்த அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை சிவசக்திநகர் வழக்கறிஞர் பாலாஜி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ரோட்டின் குறுக்கே பாய்ந்து, வாகன விபத்தை ஏற்படுத்துகின்றன. நாய்கள் கடித்ததால் பலர் ரேபிஸ் நோய் பாதிப்பிற்குள்ளாகினர். தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். நாய்களின் இன விருத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: 2019 முதல் 2024 மார்ச் வரை 39 ஆயிரத்து 456 நாய்களுக்கு வெள்ளக்கல், செல்லுாரில் வைத்து கருத்தடை செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட அதே இடத்தில் மீண்டும் நாய்கள் விடப்படுகின்றன. நாய்களை கொல்ல சட்டம், விதிகளில் இடமில்லை. நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கருத்தடை செய்ய மாநகராட்சியில் 2 கால்நடை டாக்டர்கள் உள்ளனர். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: நாய்களை கருத்தடை செய்ய 2 டாக்டர்கள் போதாது. கூடுதலாக கால்நடை டாக்டர்களை பணியில் ஈடுபடுத்த அரசு மற்றும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை ஜூன் 12 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Parameswar Bommisetty
ஏப் 26, 2024 08:39

எல்லாவற்றையும் நீதி மன்றம் தான் சொல்ல வேண்டுமா? அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை நீதி மன்றம் செய்கின்றது பரிதாப நிலை


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ