உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

மேலுார் : வெள்ளலுாரில் வல்லடிகாரர் சுவாமி திருவிழாவை முன்னிட்டு நாச்சியார் அறக்கட்டளை சார்பில் மாட்டு வண்டிப் பந்தயம் நடந்தது.பெரிய மாடு பந்தயத்தில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் புலிமலைப்பட்டி முனிச்சாமி, நகரம்பட்டி வைத்தியா, விராமதி கருப்பையா, மட்டங்கிபட்டி காவியா மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றன.சிறிய மாடு பந்தயத்தில் 32 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் புலிமலைப்பட்டி தஸ்மிகா, புதுசின்னையாபுரம் தர்மலிங்கம் முதல் பரிசையும், கூடலுார் சாதனா, பல்லவராயம்பட்டி வர்ஷா இளமாறன் 2ம் பரிசையும், வெள்ளலுார் நிரஞ்சன், கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன் 3ம் பரிசையும், குமாரமடையாபுரம் உசேன் ரோகித், வெள்ளைநாயக்கம்பட்டி ராமையா மாடுகள் 4ம் பரிசுகளை வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ