உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிட்டி ஸ்போர்ட்ஸ்

சிட்டி ஸ்போர்ட்ஸ்

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் பள்ளிகளுக்கிடை யிலான ஐவர் கால்பந்து மாநில போட்டிகள் நேற்று துவங்கியது.கல்லுாரி நிறுவனர் நாராயணன் செட்டியார் நினைவு கோப்பைக்கான நாக் அவுட் முறையில் நடக்கும் இப்போட்டிகளில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 அணியினர் பங்கேற்றுள்ளனர்.முதல் போட்டியை கல்லுாரி முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி தொகுத்துரைத்தார்.முதல் கால் இறுதி போட்டியில் எஸ். பி.ஓ.ஏ., பள்ளி 2 --- 1 என்ற கோல் வித்தியாசத்தில் டி.வி.எஸ்., சுந்தரம் மேல்நிலைப் பள்ளியை வென்றது.இரண்டாவது போட்டியில் சிவகங்கை மன்னர் பள்ளி 3 -- 0 என்ற கோல் வித்தியாசத்தில் மதுரை வல்லபா வித்யாலயா பள்ளியை வென்றது.மூன்றாவது போட்டியில் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி 'டை பிரேக்கர்' முறையில் 4 -- 3 என்ற கோல் வித்தியாசத்தில் டி நோபிலி பள்ளியை வென்றது.நான்காவது போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி அணி 5 -- 1 என்ற கோல் வித்தியாசத்தில் கல்வி இன்டர் நேஷனல் பள்ளியை வென்றது. இன்று அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ