உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிரிக்கெட் லீக் போட்டி

கிரிக்கெட் லீக் போட்டி

மதுரை : மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல் டிவிஷன் 50 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகள் மதுரை நல்லமணி பள்ளியில் நடந்தது.முதல் போட்டியில் மஸ்டங், விக்டரி அணிகள் மோதின. மஸ்டங் அணி 50 ஓவர்களில் 358 ரன் எடுத்தது. கிேஷார்குமார் 108, தென்னரசன் 91, கவுதமன் 58, சந்தோஷ் 36 ரன்கள் எடுத்தனர். மாறன் 5, கிருஷ்ண குமார் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய விக்டரி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 211 ரன் எடுத்தது. சிவக்குமார் 70, சபரிராஜன் 33 ரன் எடுத்தனர். சந்தோஷ் 2 விக்கெட் வீழ்த்தினார். மஸ்டங் அணி 147 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கே.எல்.என். பொறியியல் கல்லுாரியில் நடந்த போட்டியில் அக்னி, மெஜஸ்டிக் கப்ஸ் அணிகள் மோதின. அக்னி அணி 23.3 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது. மணி 4, அன்பழகன் 3 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து ஆடிய மெஜஸ்டிக் கப்ஸ் அணி 15.1 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செல்வபிரபு 48 ரன் எடுத்தார். மதுரை டி.வி.எஸ்., பள்ளியில் நடந்த 2வது டிவிஷன் போட்டியில் டி.வி.எஸ். அபராஜிதா, பாபு அணிகள் மோதின. டி.வி.எஸ். அபராஜிதா அணி 30 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்தது. ராமச்சந்திரன் 41, தனக்கொடி 40 ரன் எடுத்தனர். ஷர்மா 2, தனசூர்யா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய பாபு அணி 24.2 ஓவர்களில் 119 ரன் எடுத்தது. செல்வகுமார் 63 ரன் எடுத்தார். பிரகாஷ் ராஜ் 6, பாண்டிமுருகன் 2 விக்கெட் வீழ்த்தினர். டி.வி.எஸ். அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.2வது போட்டியில் டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா, சூப்பர் சானிக் கன்கார்டு அணிகள் மோதின. சூப்பர்சானிக் கன்கார்டு அணி 21.3 ஓவர்களில் 105 ரன் எடுத்தது.சந்திரமவுலி 4, சஜித் அகமது 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா அணி 10.5 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் வெற்றி பெற்றது. சுரேஷ்குமார் 48 (நாட்அவுட்), இளங்கோவன் ராமு 44 (நாட்அவுட்) ரன் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை