உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல் அறுவடை பாதிப்பு

நெல் அறுவடை பாதிப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் பெய்துவரும் மழையால் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர்.மானாவாரி பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருந்த விவசாயிகள் கோடையில் நெல் நடவு செய்தனர். தற்போது அவை அறுவடைக்கு தயாராகி விட்டன. மழை பெய்வதற்கு முன்பு சில விவசாயிகள் அறுவடை செய்தனர். மற்ற விவசாயிகள் அறுவடை செய்ய காத்திருந்த நேரத்தில் மழை பெய்ய துவங்கியது. நிலங்கள் ஈரமாக இருப்பதால் வயல்களில் இயந்திரங்கள் இறங்க முடியாத நிலை உள்ளது.தொடர்ந்து மழை பெய்தால் நெற் பயிர்கள் சாய்ந்து முளைக்க துவங்கிவிடும். பெருமளவு நஷ்டம் ஏற்படும். என்ன செய்வதென்றே தெரியவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை