உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

மதுரை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷசாராய விவகாரம் தொடர்பாக மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயத்தை தடுக்காத வருவாய், போலீஸ், அரசியல்வாதிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மாநில தலைவர் கார்த்திக், மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி