உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் மத்திய பல்கலைக்கழகம் பா.ஜ.,கூட்டணி வேட்பாளர் தேவநாதன் சிறப்பு பேட்டி   

சிவகங்கையில் வேலுநாச்சியார் பெயரில் மத்திய பல்கலைக்கழகம் பா.ஜ.,கூட்டணி வேட்பாளர் தேவநாதன் சிறப்பு பேட்டி   

சிவகங்கை தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்று, நான் எம்.பி.,யானால் பிரதமர் மோடி, தமிழக தலைவர் அண்ணாமலையிடம் வலியுறுத்தி இத்தொகுதிக்கு ராணி வேலுநாச்சியார் பெயரில் மத்திய பல்கலை கழகம் கண்டிப்பாக அமைத்து தருவேன், என பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் தெரிவித்தார்.

அவர் அளித்த சிறப்பு பேட்டி:

தொகுதியில் தொழிற்சாலை அமைக்கப்படுமாஇத்தொகுதி எல்லையான திருச்சி எப்படி வளர்ந்துள்ளது என்று பாருங்கள். ஆலங்குடி தொகுதியில் நீராதாரம் இல்லை. இதை கடந்த கால எம்.பி.,க்கள் கண்டு கொள்ளவில்லை. இங்கு ஒரு தொழிற்சாலை கூட கிடையாது. இருந்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டில் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறும் விதத்தில் இங்கு சட்டசபை தொகுதிக்கு ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும்.'கிராபைட்' ஆலை விரிவாக்கம் செய்வீர்களாஅனைத்து தேர்தல் அறிக்கையிலும் சிவகங்கை கோமாளிபட்டி கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்தனர். ஆனால் இது வரை இத்தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யவில்லை. இதற்காக பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து, மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் 'கிராபைட்' உப தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்.நீங்கள் வெற்றி பெற்றால் தொகுதியில் இருப்பீர்களாநிச்சயமாக. சிவகங்கை தொகுதி பக்கமே முன்னாள் அமைச்சர் சிதம்பரம், கார்த்தி எம்.பி., ஆகியோர் வரவில்லை என வாக்காளர்கள் கூறினர். தொகுதிக்கே அவர்கள் வருவதில்லை என்பது தான் பேச்சாக உள்ளது. அதே நேரம் பிரதமர் மோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்களை சும்மா விடமாட்டார். ஒவ்வொரு எம்.பி.,யும் 90 நாட்களுக்கு ஒரு முறை தொகுதியில் செய்த வளர்ச்சி பணிகள் குறித்த விபர அறிக்கையை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். பிரதமர், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் என்னை நம்பி தான் சிவகங்கைக்கு அனுப்பியுள்ளனர்.சிவகங்கையில் உங்களுக்கு போட்டி என்று எந்த வேட்பாளரை நினைக்கிறீர்கள் காங்., வேட்பாளர் மீது எதிர்ப்பு அலை அதிகமாக உள்ளது. இதனால், வெற்றி வாய்ப்பு அதிகம் எங்களுக்கு உள்ளது. குறைந்தது 7 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.தி.மு.க., ஆட்சி மீது அதிருப்தி இருப்பதாக நினைக்கிறீர்களாதமிழகத்தில் இருந்து தி.மு.க., கூட்டணியில் 38 எம்.பி.,க்கள் சென்றிருந்தனர். அவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள். 2019 ல் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, அவர் சொன்னதை மக்கள் முழுமையாக நம்பினார்கள். இப்போது அப்படி இல்லை கடந்த 3 ஆண்டு அவர் ஆட்சியில் உள்ளார். மகளிர் உரிமை தொகை கூட மக்கள் போராட்டத்திற்கு பின் தான் கிடைத்தது. இன்னும் பல ஏழை, நடுத்தர, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் உரிமை தொகை கிடைக்காத அதிருப்தியில் உள்ளனர். ஆனால், பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் சொல்லாமல் கூட விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்துகிறார். இந்தியாவில் உள்ள புதிய வாக்காளர்கள் 100 சதவீதம் பேர் பிரதமர் மோடி, அவரது ஊழலற்ற நிர்வாகத்தை விரும்புகின்றனர். உலகளவில் தலைவர்கள், பிரதமர் மோடியை சுட்டிக்காட்டி நிர்வாகம் செய்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி கூட, மோடியிடம் 'ஆட்டோ கிராப்' வாங்குகிறார். 2004 முதல் 2014 வரை எத்தனை வெடிகுண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், கடந்த 10 ஆண்டாக இந்தியாவை அமைதி பூங்காவாக வைத்துள்ளார். பா.ஜ.,வில் இரண்டு ஹீரோக்கள், ஒன்று பிரதமர் மோடி, தமிழகத்தில் அண்ணாமலை. இவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை துாங்கவிடாமல் வைத்து வருகிறார். சிவகங்கை தொகுதி வளர்ச்சிக்கு ரயில்வே திட்டம் வருமாசிங்கம்புணரி கயிறு உற்பத்தி, ஆயில் ஏற்றுமதி, நார் தொழில் வர்த்தகத்திற்கான திண்டுக்கல் - -சிங்கம்புணரி வழியாக காரைக்குடி அகல ரயில்பாதை திட்டம், ராமநாதபுரம் தொண்டி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு மதுரை - தொண்டி, காரைக்குடிக்கு அகல ரயில்பாதை திட்டத்தை வலியுறுத்துவேன்.சிவகங்கையில் மத்திய பல்கலை அமையுமாஇங்கு மத்திய பல்கலை இல்லை. இத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு சிலை நிறுவப்படும். வேலுநாச்சியார் பெயரில் தொகுதிக்குள் மத்திய பல்கலை கழகம் கொண்டு வரப்படும். மதுரைக்கு எய்ம்ஸ் வந்துவிட்டது. செட்டிநாட்டில் விமான நிலையம் அமைத்து தருவதாக காங்., கட்சியினர் 40 ஆண்டாக கூறியும் நடக்கவில்லை. நான் வெற்றி பெற்றதும் செட்டிநாட்டில் 'உதான்' திட்டம் மூலம் விமான நிலையம் துவக்கப்படும்.சிவகங்கை தொகுதிக்கு பூக்கள், காய்கறிகளை பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கோடவுன் கட்டித்தரப்படும். நீராதாரத்தை பாதிக்க செய்யும், யுகலிப்டஸ் மரங்கள் நடுவதை தடுக்க முழு நடவடிக்கை எடுப்பேன். பெரியாறு அணையில் இருந்து ஆண்டு தோறும் வர வேண்டிய பங்கு தண்ணீரை நிச்சயம் தடையின்றி பெற்றுத்தருவேன்.ஏன் பா.ஜ.,விற்கு ஓட்டளிக்க வேண்டும்தேசம் காக்கப்பட வேண்டும். நாட்டில் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் குடும்பம், கிராமம், நகரம், மாநகராட்சி பகுதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும். தேச நலனுக்காக பா.ஜ.,விற்கே 100 சதவீத வாக்காளர் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ