உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊருணிகளை துார்வார மாநகராட்சி அனுமதி

ஊருணிகளை துார்வார மாநகராட்சி அனுமதி

மதுரை: மதுரையில் நமக்கு நாமே திட்டம், சமூக பங்களிப்பு (சி.எஸ்.ஆர்.,) திட்டங்களின் கீழ் அவனியாபுரம் அரியநாச்சியார், நல்லதங்காள் ஊருணிகளை துார்வார தானம் அறக்கட்டளைக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் அனுமதி வழங்கினர்.இதன் மூலம் துார்வாரி வேலி அமைத்தல், கரைகளை உயர்த்துதல், மரக் கன்றுகள் நடும் பணி நடக்கும். துார்வாரும்பட்சத்தில் அரியநாச்சி ஊருணியில் 2.5 லட்சம், நல்லதங்காள் ஊருணியில் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் சேகரிக்க முடியும். யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஆக., 8 - 11 வரை 'மாமதுரை விழா' நடத்துவதற்காக நிபந்தனை அடிப்படையிலான அனுமதியையும் அந்த அமைப்பினருக்கு மேயர், கமிஷனர் வழங்கினர். இதன் மூலம் தமுக்கம், லட்சுமிசுந்தரம் ஹால், வைகை கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு, கலை, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் துணைமேயர் நாகராஜன், பி.ஆர்.,ஓ., மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ