உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேர்தல் பார்வையாளர் ஆலோசனை

தேர்தல் பார்வையாளர் ஆலோசனை

திருமங்கலம்: விருதுநகர் லோக்சபா தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் ராதேஷ்யாம் ஜாஜூ நேற்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கண்காணிப்பு குழுவோடு ஆலோசித்தார்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் மனேஷ்குமார், தேர்தல் பிரிவு உதவி தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியினர் மிரட்டல், பணம், பொருட்கள் பறிமுதல் செய்யும் நடைமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினர். கண்காணிப்பு வாகனங்களில் உள்ள கேமராக்களின் செயல்பாடுகளையும் அதில் உள்ள காட்சிகளை அதிகாரிகளுக்கு எவ்வாறு அனுப்புவது என்பது குறித்தும் அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !