மதுரை, : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.திருஞானம் துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் சரவணன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கீதா முன்னிலை வகித்தார். ஆசிரியை தங்கலீலா மரக்கன்றுகளை நட்டார். செயலாளர் சங்கீத்ராஜ் சுற்றுச்சூழல் மன்றம் செயல்பாடு குறித்து பேசினார். ஆசிரியர் பாக்யலட்சுமி ஏற்பாடு செய்தார்.காந்தி மியூசிய வளாகத்தில் தானம் அறக்கட்டளை, மதுரை கிரீன் அமைப்பு மூலம் இலவச மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ் முன்னிலை வைத்தார். மதுரை கிரீன் ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் பேசுகையில், ''எங்கள் அமைப்பு மூலம் 15 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம்'' என்றார்.அகர்வால் மருத்துவமனை இயக்குநர் பத்ரி நாராயணன் இயற்கை விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியிட அமெரிக்கன் கல்லுாரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன் பெற்றுக்கொண்டார். கல்வி அலுவலர் நடராஜன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், அரசுப் பள்ளிகளின் ஆய்வாளர் செல்வம், ஆசிரியர்கள் ஹரிபாபு, ராஜவடிவு, சிவராமன், முனியாண்டி, ஷீலாதேவி கலந்து கொண்டனர்.சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நேஷனல் இன்சூரன்ஸ் தலைமை மண்டல மேலாளர் விவேகானந்தன் மரக்கன்றுகள் நட்டி பேசினார். மண்டல மேலாளர்கள் தேவி பிரசாத், கார்த்திகேயன், சுவர்ணலதா பங்கேற்றனர். கல்லுாரி வாரிய உறுப்பினர் இல. அமுதன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் முரளிதரன், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன், உதவி தலைமையாசிரியர் அகிலாண்டேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பி.ஆர்.ஓ., பெருமாள்ராஜ் ஏற்பாடு செய்தார்.சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நடந்தது. செயலாளர் கணேசன் வரவேற்றார். பேராசிரியை இந்திராபதி முன்னிலை வகித்தார். நிறுவனர் பதி பேசுகையில்,''மதுரை - மேலுார் நான்கு வழிச்சாலையில் அரை கி.மீ., துாரத்திற்கு குப்பை எரிக்கப்படுகிறது. குப்பையில் இருந்து மறுசுழற்சி பொருட்களை பிரித்த பின், மீதமுள்ள குப்பையை சாலை ஓரங்களில் கொட்டக்கூடாது. பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்தாலே சுற்றுச்சூழல் மாசு பாதியளவு குறைந்து விடும்'' என்றார். திருநகர்
முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி மற்றும் மாநகராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகித்து மரக்கன்று நட்டார். தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குநர் நடன குருநாதன் முன்னிலை வகித்தனர். மக்கும், மக்காத குப்பை குறித்தும், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். தேசிய பசுமைப்படை, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., சாரணர் படை மாணவர்கள் பங்கு பெற்றனர்.