உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எப்ப வருமோ, எப்ப போகுமோ மின்தடையால் முணுமுணுப்பு

எப்ப வருமோ, எப்ப போகுமோ மின்தடையால் முணுமுணுப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகர், கிராம பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.கோடை வெயில் உச்சத்தில் உள்ள நிலையில் உசிலம்பட்டி நகரில் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.கிராமப் புறங்களில் மும்முனை மின்சாரத்தை இரவு நேரங்களில் மட்டும் வழங்கி வந்தனர். சில நாட்களாக மும்முனை மின்சாரம் எப்போது வரும், எப்போ போகும் என்பது தெரியாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோடை வெயில் அதிகம் உள்ளபோது, இரவு நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால் தான் பயிர்கள் ஓரளவு தாக்குப்பிடிக்கும் என்பதால் எப்போ மின்சாரம் வரும் என காத்திருந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இதற்கு முறைப்படி மின்வெட்டு நேரத்தை அறிவித்து அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை