உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் ஸ்டாண்ட் வழக்கு தடை நீட்டிப்பு

பஸ் ஸ்டாண்ட் வழக்கு தடை நீட்டிப்பு

மதுரை : கரூர் திருமாநிலையூரில் தொலைதுார பஸ்களை இயக்க புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக சிலர், 'அருகே அமராவதி ஆறு உள்ளது. நீர்நிலை அருகே பஸ் ஸ்டாண்ட் அமைப்பதில் விதிமீறல் உள்ளது. தடை விதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தனர். ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்தது.தடையை விலக்கிக் கொள்ள உத்தரவிடக்கோரி தமிழக அரசு தரப்பில் மனு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு தடை உத்தரவை ஜூன் 10 வரை நீட்டித்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ