விவசாயிகள் தேர்வு
திருப்பரங்குன்றம் : முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் திருப்பரங்குன்றம் பகுதி நிலங்களில் வரப்பு ஓரங்களில் இயற்கை பூச்சி விரட்டிகளான ஆடாதோடா, நொச்சி வளர்க்க விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. அதற்கான விவசாயிகள் தேர்வு நடக்கிறது. ஆர்வமுள்ளோர் திருப்பரங்குன்றம் வேளாண் விரிவாக்க மையத்தில் விவரம் அறியலாம் என உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.