உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கற்றல் நன்றே... கற்றல் நன்றே... குப்பை குவியலை அகற்றல் நன்றே

கற்றல் நன்றே... கற்றல் நன்றே... குப்பை குவியலை அகற்றல் நன்றே

மதுரை; மதுரையில் குப்பை துர்நாற்றத்துக்கு மத்தியில் மாணவர்கள் கல்வி கற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.திருநகர் அமலா பெத்தண்ணல் நடுநிலைப்பள்ளியை ஒட்டி மாநகராட்சி குப்பைத் தொட்டி உள்ளது. அதில் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி எங்கெங்கோ இருந்து வந்து குப்பையை கொட்டிச் செல்கின்றனர். துப்புரவு பணியாளர்பற்றாக்குறையால் குப்பையை அகற்ற ஆள் இல்லாமல் ரோடு வரை சிதறிக் கிடக்கின்றன. பள்ளி அருகே குப்பை குவியலாக கிடப்பதால் வகுப்பறைக்குள்ளும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். சில சமூக விரோதிகள் இரவில் குப்பையில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.மாணவர்கள் கூறுகையில், 'பள்ளி அருகே குப்பை கொட்டுவதால் தாங்கமுடியாத துர்நாற்றம்,நோய் தொற்று எங்களுக்குஏற்படுகிறது. தயவு செய்து இங்கு குப்பையை கொட்டாதீர்கள்' என பேனர் வைத்தும் பொதுமக்கள் பொறுப்பில்லாமல்குப்பையை கொட்டி வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் மாணவர் நலன் கருதி குப்பை தொட்டியை உடனே அகற்றி சுகாதாரத்தை காக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி