உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நேர்முக உதவியாளர் இல்ல திருமணத்தில் கவர்னர் ரவி

நேர்முக உதவியாளர் இல்ல திருமணத்தில் கவர்னர் ரவி

மேலுார், : தன் நேர்முக உதவியாளர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மதுரை மாவட்டம் மேலுார் வந்தார்.கவர்னரின் நேர்முக உதவியாளரான சென்னையைச் சேர்ந்த ரவீந்திரன் மகன் சுதர்ஷனுக்கும், மேலுாரைச் சேர்ந்த ஜனனிக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க நேற்று காலை 8:15 மணிக்கு விமானத்தில் வந்த கவர்னரை கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன் வரவேற்றனர்.சர்க்யூட் ஹவுஸ் சென்ற அவர் ஓய்வுக்கு பின் மேலுார் சென்றார். மணமகன் வீட்டார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மணமகனிடம் திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் கவர்னர். பின் மதுரை சர்க்யூட் ஹவுஸ் சென்று ஓய்வெடுத்தார். மதியம் 12:15 மணிக்கு விமானத்தில் சென்னை புறப்பட்டார். எஸ்.பி., அரவிந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை