உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்

மழையால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்

அலங்காநல்லுார், : வாடிப்பட்டி தாலுகாவில் பெய்த மழையால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைத்துள்ளதால் கால்நடை வளர்ப்போர் ஆறுதல் அடைந்துள்ளனர். இத்தாலுகாவில் சோழவந்தான், அலங்காநல்லுார் பகுதிகளில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் நெல் அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இப்பகுதியில் முகாமிட்டுள்ள கிடை ஆடு, மாடுகள் அறுவடை முடிந்த வயல்களில் உள்ள அடிக்கட்டை தாள்கள், காய்ந்த வைக்கோலை மேய்ந்து வந்தன. கோடை வெயிலின் தாக்கத்தால் மரம் செடிகள் காய்ந்தன.சமீபத்திய மழையால் நிலங்களில் ஈரப்பதமாகி செடி கொடிகள், புல் வகைகள் முளைத்துள்ளன. இதனால் காய்ந்த தீவனங்களை உண்டு வந்த கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைத்துள்ளதாக கால்நடை வளர்ப்போர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி