மேலும் செய்திகள்
மாணவன் பலி
2 hour(s) ago
கொட்டாம்பட்டியில் பஸ் மறியல்
2 hour(s) ago
சிலம்பு போட்டியில் மாணவர்கள் சாதனை
2 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி /டிச.31 க்குரியது
2 hour(s) ago
கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி
2 hour(s) ago
மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு சர்ச் பாதிரியார் இல்லத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கில் சி.ஆர்.பி.எப்., வீரருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் அனுமதித்தது.மைலோடு சர்ச் பாதிரியார் இல்லத்தில் ஜன., 20ல் பங்கு பேரவை ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சேவியர்குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். தி.மு.க., ஒன்றிய முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். சிலர் கைது செய்யப்பட்டனர். ராபின்சன் திருச்செந்துார் நீதிமன்றம், ரமேஷ்பாபு நாகபட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே ரமேஷ்பாபு ஜாமின் மனுவை வாபஸ் பெற்றதால் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எட்வின் ஜோஸ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பில்லை. மனுதாரர் சி.ஆர்.பி.எப்., வீரர், கோவையில் பணிபுரிகிறார். விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தார். சம்பவ இடத்திற்கு அருகே மனுதாரர் வீடு உள்ளது. சப்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்தார். அவரை வழக்கில் தவறாக சேர்த்துள்ளனர்.அரசு தரப்பு: 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவருக்கு ஜாமின் அனுமதிக்கப்பட்டுள்ளது. செலவு கணக்கு கேட்டபோது பிரச்னையில் சம்பவம் நடந்துள்ளது. முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அவர் மறு உத்தரவு வரும்வரை கோவை சிங்காநல்லுார் போலீசில் தினமும் காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago