உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தளபதி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் வலியுறுத்தல்

தளபதி எம்.எல்.ஏ., கலெக்டரிடம் வலியுறுத்தல்

மதுரை: மதுரை நகரில் நடந்து வரும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க அரசு துறைகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்த வேண்டும் என, கலெக்டர் சங்கீதாவிடம் தளபதி எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது: மதுரை நகரில் கோரிப்பாளையம், மேலமடை சந்திப்பில் மேம்பாலம் பணிகள், 4 வழிச்சாலையில் பெத்தானியாபுரம் பகுதியில் ரோடு என பல இடங்களில் பணிகள் நடக்கிறது. கோரிப்பாளையம் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும், மேலமடையில் ரோட்டில் குறுக்கிடும் கால்வாயை சரிசெய்ய வேண்டும். வைகை ஆற்றுக்குள் பாலப் பணிக்கு இடம் ஒதுக்கித் தரவேண்டும். இவற்றுக்கெல்லாம் அந்தந்த துறைகள் தாமதம் செய்வதால் பணிகளும் தாமதமாகிறது.கோரிப்பாளையம் பாலம் பணியில் அண்ணாத்துரை சிலை அருகே 50 வீடுகள் இடிக்கப்பட உள்ளன. இவர்களுக்கு மாற்று இடம், நிவாரணம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, போலீஸ் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்த கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை