உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டாசு தொழிலாளர்களுக்கு காப்பீடு அவசியம்: ஏ.ஐ.சி.சி.டி.யூ., வலியுறுத்தல்

பட்டாசு தொழிலாளர்களுக்கு காப்பீடு அவசியம்: ஏ.ஐ.சி.சி.டி.யூ., வலியுறுத்தல்

மதுரை : 'சிவகாசி பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி வழங்க வேண்டும்' என ஏ.ஐ.சி.சி.டி.யூ., அமைப்பு வலியுறுத்தியுள்ளது.சிவகாசி பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து குறித்து அனைத்திந்தியத் தொழிற் சங்கங்களின் மத்திய அவை (ஏ.ஐ.சி.சி.டி.யூ.,) ஆய்வு குழு அறிக்கை வெளியிட்டது. இதில் பேராசிரியர் முரளி, சி.பி.ஐ.,(எம்.எல்.,) மதுரை மாவட்ட செயலாளர் மதிவாணன், கட்டுமான தொழிலாளர் சங்கத் தலைவர் அந்தோணி முத்து கலந்து கொண்டனர்.அவர்கள் கூறியதாவது: சிவகாசி பட்டாசு ஆலைகளில் 2019 முதல் இன்று வரை நடந்த 64 விபத்துகளில் 131 பேர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் அரசு அனுமதி பெறாத பல தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படாமல் இயங்குவதே. சீனாவில் பேன்ஸி வெடிகள் தயாரிப்பதை போல இங்கும் தயாரிக்க பலர் போட்டி போடுகின்றனர். 4 பேருக்கான அறைக்குள் 10 பேரை வேலை செய்ய வைக்கின்றனர். இதனை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை.விபத்தில் பாதிப்போரை மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால் வழியிலேயே சிலர் இறந்து விடுகின்றனர். இவர்களுக்கு சிவகாசியிலேயே தரமான மருத்துவமனை வசதி தேவை. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காப்பீடும் கிடையாது.பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் விவசாயிகளே பணியாற்றுகின்றனர். போர்மேன்கள், தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவில்லை. சிவகாசி மருத்துவமனையில் உள்ள சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவை மேம்படுத்தி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை