உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்வதேச போதை ஒழிப்பு தினம்

சர்வதேச போதை ஒழிப்பு தினம்

மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சர்வதேச போதை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.உலக சுகாதார மைய அறிவுரைப்படி ஜூன் 26ம் நாள் போதை ஒழிப்பு, விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது. இதைப்போற்றும் விதமாக மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மனநல மருத்துவத்துறையின் நம்பிக்கை மையத்தில் மது பிரச்னையால் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று, மது இன்றி வாழ்வோரை ஊக்குவிக்க அவர்களின் குடும்பத்தாருக்கு 9வது ஆண்டாக பரிசு வழங்கி பாராட்டு நடத்தப்பட்டது.இதில் வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி முதன்மை நிர்வாக அதிகாரி மணிவண்ணன், முதல்வர் திருநாவுக்கரசு, மருத்துவ கண்காணிப்பாளர் கணேஷ்பிரபு, மனநலத்துறை முன்னாள் தலைவர் ராமானுஜம் பரிசு வழங்கினர். முன்னதாக டாக்டர் கோகிலாராணி வரவேற்றார். இணை துறைத் தலைவர் ரீனாரோஸ்லிண்ட், உளவியல் ஆலோசகர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை