உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தம்பதி; தற்கொலையா என விசாரணை

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தம்பதி; தற்கொலையா என விசாரணை

மதுரை : மதுரையில் பூட்டிய வீட்டிற்குள் வயது முதிர்ந்த தம்பதியின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.மதுரை ஆனையூர் பகுதி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் 70. இவரது மனைவி பாக்கியம் 64. மாரியப்பன் தனியார் பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றினார். இத்தம்பதிக்கு வாரிசுகள் இல்லை. முதுமை காரணமாக மனைவியின் உடல்நிலை பாதித்திருந்தது. மாரியப்பன் கூடவே இருந்து மனைவியை கவனித்து வந்தார். சில நாட்களாக உணவுகூட சமைக்க முடியாமல் தனிமையில் தவித்தனர்.இந்நிலையில் சில நாட்களாக மாரியப்பன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கூடல்புதுார் போலீசுக்கு தெரிவித்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பாக்கியம் கட்டிலிலும், மாரியப்பன் கழிப்பறையிலும் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. மாரியப்பன் உடல் அருகே விஷம் வைத்திருந்த பாட்டில் கிடந்தது.போலீசார் கூறுகையில் 'குழந்தைகள் இல்லாததால் வயதான காலத்தில் இருவரும் தனிமையில் தவித்துள்ளனர். மனைவியை பராமரிக்க முடியாத நிலை மாரியப்பனுக்கு ஏற்பட்டிருக்கலாம். மனைவி உயிரிழந்ததால் அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்தாரா அல்லது இருவரும் தற்கொலை முடிவை எடுத்தனரா என விசாரணை நடக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை