உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூன் 21 முக்கனி உற்ஸவம்

ஜூன் 21 முக்கனி உற்ஸவம்

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் முக்கனி உற்ஸவம் ஜூன் 21ல் நடக்கிறது. ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்று மாலை 6:15 முதல் இரவு 7:00 மணிக்குள் கோயிலின் ஆஸ்தான மண்டபத்தில் முக்கனி உற்ஸவம் நடக்கிறது. தலைமை பட்டர் அம்பி கூறுகையில், ''ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமி நாளன்று பெருமாள், தாயாருக்கு மா, பலா, வாழை என முக்கனிகளால் நைவேத்யம் செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடைபெறும். இதனால் நாம் முப்பிறவிகளில் செய்த பாவங்கள், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்'' என்றார்.தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும் இதே நாளில் இத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாச்சலம், துணை கமிஷனர் கலைவாணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை