உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயில் கும்பாபிஷேகம் எப்போது

குன்றத்து கோயில் கும்பாபிஷேகம் எப்போது

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக அறங்காவலர் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் சத்யபிரியா தலைமை வகித்தார். அறங்காவலர்கள் மணிச்செல்வம், பொம்மை தேவன், சண்முகசுந்தரம், துணை கமிஷனர் சுரேஷ் கலந்து கொண்டனர்.சத்யபிரியா கூறியதாவது: கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கும்பாபிஷேக பணிகள் துவங்குவதற்கு தடையாக உள்ள லட்சுமி தீர்த்த குளம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்த முடிவானது. புத்துணர்வு முகாமில் உள்ள யானை தெய்வானையை கோயிலுக்கு அழைத்து வருவது, உப கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்துவது உள்ளிட்ட வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ