உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

மதுரை: அவனியாபுரம் அயன்பாப்பாக்குடி கொத்தாலத்து முனியாண்டி சுவாமி கோயிலில் ஆக.20 ல் காலை 7:00 மணிக்கு மேல் 108 சங்காபிஷேக 48 ம் நாள் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி தேவதா அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, விக்னேஸ்வர் பூஜை, மகாபூர்ணாஹுதி நடந்தது. இதையடுத்து காலை 8:30 மணிக்கு 48 வது நாள் மண்டல பூஜை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பிரகாஷ் சிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். அபிஷேக, தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. கொத்தாலத்தெரு, கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை