| ADDED : மே 31, 2024 12:56 AM
மேலுார்:மதுரை மாவட்டம், மேலுார் அருகே போதையில் டூ - வீலரில் வந்தவரால் ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து சென்னைக்கு 37 பயணியருடன் முத்துமாரி டிராவல்ஸ் என்ற ஆம்னி பஸ் புறப்பட்டது. மதுரை வரிச்சியூர் பரமேஸ்வரன், 46, என்பவர் ஓட்டினார். நேற்று முன் தினம் அதிகாலை ஒரு மணிக்கு மேலுார் அருகே சாலைக்கிப்பட்டி அருகே மதுபோதையில் டூ - வீலரில் வந்தவர் பஸ் முன் விழுந்தார்.அவர் மீது மோதாமல் இருக்க பஸ்சை பரமேஸ்வரன் திருப்ப, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணித்த சாத்துார் சுப்பிரமணியன், 61, இறந்தார். விருதுநகர் முருகவேல், 46, சியாமளா, 40, சென்னை மாடசாமி, 37 உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. மேலுார், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.மதுரை மேலுார் பொறுப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணன், எஸ்.ஐ.,க்கள் பழனியப்பன், முத்துக்குமார் விசாரிக்கின்றனர்.