உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம்: உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேச்சு

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம்: உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேச்சு

மேலுார் : ''கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம்'' என உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசினார்.மதுரை மாவட்டம்மேலுாரில்முல்லை பெரியாறு அணையை பென்னிகுவிக் உருவாக்கியது குறித்து நீரதிகாரம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தக இலக்கிய விழாவில் நீதிபதி சுரேஷ்குமார்பேசியதாவது:தமிழக கிராமப்புற இளைஞர்கள் சோம்பேறிகளாக, குடிமகன்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் கொடுப்பது தவறான முன்னுதாரணம். நுாறு நாள் வேலை திட்டத்தின் மூலம் இளைஞர்கள் சோம்பேறிகளாக மாறுவதோடு சம்பளத்தை டாஸ்மாக்கில் கொடுத்து குடிமகன்களாக மாறி விடுகின்றனர்.இந்நிலை மாற பள்ளி, கல்லுாரிகளில் இருந்து நமது பண்பாடு வீரம், வரலாறு, தெரிந்துக்கொள்ள வேண்டும். வரலாற்றை சொல்லக்கூடிய தார்மீக கடமையும், பொறுப்பும் எழுத்தாளருக்கு உண்டு. வரலாற்று படைப்பு தான் நீரதிகார புத்தகம். 9 ஆண்டுகள் போராடி கட்டப்பட்டது முல்லை பெரியாறு அணை. அணைபற்றியும், அணையின் வரலாறு பற்றியும் புத்தகத்தில் எழுத்தாளர் வெண்ணிலா தெளிவாக எழுதியுள்ளார்.லண்டன், சென்னை ஆவண காப்பகங்களில் இருந்து கிடைத்த ஆவணங்களை கொண்டு இப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவதற்காக அணையை கட்டியவர் கர்னல் பென்னிகுவிக். அணை குறித்த வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்த புத்தகம் தான் நீரதிகாரம்என்றார். பேச்சாளர் பாரதி பாஸ்கர்,விஜயா பதிப்பகம் வேலாயுதம், துருவம் குழுமத்தின் நிறுவனர் ப்ரீத்திஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஜூன் 25, 2024 22:00

இதுபோன்றே உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் வாயைத்திறக்கவே இல்லையே ஏனென்று தெரியவில்லை அவர்களும் இதை தடைசெய்தால் இது போன்று இனி நாட்டில் மக்கள் பணத்தை வீணாக்காமல் எல்லா மாநில அரசும் இதுபோன்ற அறிவிப்பை அறிவிக்காது


என்றும் இந்தியன்
ஜூன் 25, 2024 16:26

ரவிக்கு மாற்று உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், இவரை டாஸ்மாக்கினாட்டின் அடுத்த கவர்னராக பதவி கொடுக்கலாம்


murali daran
ஜூன் 25, 2024 09:36

முற்றிலும் சரியான கருத்து - கள்ள சாராயத்தில் இறந்தவர்களுக்கு பற்றி கொஞ்சம் கூட பரிதாபமே அநேகம் பேருக்கு வரவில்லை - அதிமுக இதை வைத்து மக்கள் மத்தியில் வாய் கிழிய கதறுவது வீண் வேலையாக தோன்றுகிறது


சமீபத்திய செய்தி