உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதிய நடைமுறையில் சம்பளம் வழங்க மனு

புதிய நடைமுறையில் சம்பளம் வழங்க மனு

மதுரை: தமிழ்நாடு உழவர் சந்தை பாதுகாவலர் மற்றும் துாய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் திராவிட மாரி தலைமையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை கமிஷனரிடம் மனு கொடுத்தனர். அதில், தமிழகத்தில் 181 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சந்தையிலும் 3 காவலர்கள், ஒரு துப்புரவு பணியாளர் வீதம் 25 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி, தினக்கூலி அடிப்படையில் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ஈஸ்வரன், கொள்கை பரப்புச் செயலாளர் கார்த்தான், தலைமை நிலைய செயலாளர் சாகுல்அமீது, நிர்வாகிகள் லட்சுமணன், செல்வராஜ், பழனிசாமி, கிருஷ்ணசாமி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை