உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு வாரத்திற்குள் புகார்களுக்கு தீர்வு போலீஸ் கமிஷனர் லோகநாதன் உறுதி

ஒரு வாரத்திற்குள் புகார்களுக்கு தீர்வு போலீஸ் கமிஷனர் லோகநாதன் உறுதி

மதுரை: 'மதுரையில் பொதுமக்களின் புகார்களுக்கு அதிகபட்சம் ஒருவாரத்திற்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட வாரங்களுக்கு ஒருமுறை மெகா குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. நேற்று நடந்த மெகா முகாமில் 265 மனுக்கள் குறித்து விசாரிக்கப்பட்டன. புதிதாக 51 மனுக்கள் பெறப்பட்டன.கமிஷனர் லோகநாதன் கூறியதாவது: இதுவரை நடந்த முகாம்களில் விசாரிக்கப்பட்டு நிலுவையில் இருந்த மனுக்கள் விசாரித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகார் கொடுத்தால் அதிகபட்சம் ஒருவாரத்திற்குள் தீர்வு காண வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தீர்வு பெற்றவர்களிடம் போலீஸ் விசாரணை, அணுகுமுறை, வரவேற்பு போன்றவை குறித்து கருத்து கேட்டு வருகிறோம். அவர்கள் தரும் பதில்களை பொறுத்து 5 ஸ்டார் முதல் ஒரு ஸ்டார் வரை மதிப்பீடு வழங்கி அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கிறோம். குறைந்த ஸ்டார் மதிப்பீடு பெற்றால் அதற்கான காரணங்கள், நடைமுறை சிக்கல்கள் குறித்து புகார்தாரர்களிடம் விளக்குகிறோம் என்றார்.துணைகமிஷனர்கள்காரட் கருண் உதேவ்ராவ், மதுகுமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ