உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கடன் வாங்கித்தந்து நுாதன மோசடிமதுரை: மேலார் சொக்கம்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பலருக்கும் வங்கி கடன் வாங்கித்தந்தார். அதற்காக பெற்ற பயனாளிகளின் ஆவணங்களை வைத்து அப்பெண் தனியாக வங்கி, தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி நுாதன முறையில் மோசடி செய்துள்ளதாககூறி பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று மாவட்ட எஸ்.பி., அரவிந்த்திடம் புகார் அளித்தனர்.வக்கீல் வீட்டில் திருடியவர்கள் கைதுமதுரை: சிங்கராயர் காலனி வக்கீல் லல்லி 54. கோர்ட்டிற்கு லல்லி சென்ற நிலையில் இவரது வீட்டில் சுவர் பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சிங்கராயர் காலனி வைரமுத்து 18, செல்லுார் பிரவீன் 20, ஆகியோர் பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள், ரூ.20 லட்சத்தை திருடியதாக கைது செய்யப்பட்டனர்.மாணவர் மாயம்மேலுார்: தர்மசானபட்டி பிரியா. இவரது மகன் லோகித் 10. பெற்றோர் வெளியூரில் வேலை பார்ப்பதால் தர்மசானபட்டியில் தாத்தா வெள்ளையன் வீட்டில் தங்கி அழகிச்சிபட்டி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். ஜூன் 23 பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கீழவளவு எஸ்.ஐ., சுப்புலட்சுமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை