மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி புதுமண பெண் பலி
17 hour(s) ago
தேசியத் தலைவர் படத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
19 hour(s) ago
பட்டப்பகலில் வெட்டிக்கொலை மதுரை: சக்கிமங்கலம் கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் லோடுமேன் அருள்முருகன் 29. மனைவி, குழந்தை உள்ளனர். இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நேற்று மதியம் விளாங்குடியில் சிலரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் இவரது சித்தி மகன் நவநீதன் கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்தது தெரிந்தது. கடந்தாண்டு கோயில் திருவிழாவில் முன்விரோதம் காரணமாக நவநீதன் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அருள்முருகன் கைதாகி ஜாமினில் வெளிவந்த நிலையில் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.வெடிகுண்டு வீசிய வழக்கில் சரண்மேலுார்: கீழவளவில் மகேஷ் மற்றும் வெள்ளையத்தேவன் தலைமையில் இரு கோஷ்டிகள் செயல்படுகின்றன. ஏப்.,21 கீழவளவு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மகேஷ் தரப்பை சேர்ந்த நவீன் மீது வெள்ளையத்தேவன் தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் குத்தியதில் இரு விரல்கள் துண்டாயின. இவ்வழக்கில் 4 பேர் கைதான நிலையில் நேற்று மேலுார் நீதிமன்றத்தில் வெள்ளையத்தேவன் 27, சரணடைந்தார். அவரை மாஜிஸ்திரேட் கோகுலகிருஷ்ணன் மே 10 வரை 'ரிமாண்ட்' செய்து உத்தரவிட்டார்.
17 hour(s) ago
19 hour(s) ago