உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெயர் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை

பெயர் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா நடந்தது.துணை இயக்குநர் சுசீலா வரவேற்றார். கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். இயக்குநர் அவ்வை அருள் பேசுகையில், ''பாரதிதாசன் விருப்பப்படி மதுரையில் அனைத்து பெயர் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்'' என்றார்.தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பாரதிதாசன் பாடல்களின் பாட்டரங்கம் நடந்தது. கலெக்டர் பேசினார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் கருத்தரங்கம், சந்திர புஷ்பம், முத்தரசு இசையரங்கம், கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில் கவியரங்கம் நடந்தது.குரு மருத்துவமனை தலைவர் டாக்டர் பாலமுருகன் பேசினார். துறை துணை இயக்குநர் சத்தியபிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை