உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.2.50 கோடி ஒதுக்கி ஆறு மாதமாச்சு பராமரிப்பு பணி என்னாச்சு

ரூ.2.50 கோடி ஒதுக்கி ஆறு மாதமாச்சு பராமரிப்பு பணி என்னாச்சு

மேலுார் : மேலுார் நீர்வளத்துறை கோட்டத்தில் கால்வாய்களை பராமரிக்க நிதி ஒதுக்கியும் வேலை செய்யாமல் காலம் கடத்துவதாக நீர்வளத் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.பெரியாறு வைகை பாசனத்தில் கள்ளந்திரி முதல் குறிச்சிபட்டி வரையான மேலுார் பகுதியில் ஒரு போக பாசனமாக 86 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் உள்ளது. அணையில் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் இருந்தால் ஆக.,15 ல் சாகுபடிக்கு திறக்க வேண்டும் என்பது விதி. அணையில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் செப்., முதல் வாரம் தண்ணீர் திறக்க உள்ளனர்.ஆனால் நீர்வளத்துறையினர் இதுவரை பாசன கால்வாய், கண்மாய் மற்றும் குளங்களை பழுது பார்க்கவில்லை. இக்கால்வாய்களை பராமரிக்கவும், பழுது நீக்கவும் 13 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மராமத்து பார்ப்பதற்கு நிதி ஒதுக்கியும் பராமரிக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர் விவசாயிகள்.ஐந்து மாவட்ட விவசாய சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் கூறியதாவது: பாசன கால்வாய்களை நீர்வளத்துறையினர் பராமரிக்காததால் முட்செடிகள் வளர்ந்துள்ளதுடன், சிலாப்புகள் சிதிலமடைந்துள்ளன. பல இடங்களில் கால்வாய் சுவடே இல்லாமல் அழிந்துள்ளது. இந்தாண்டு பராமரிப்புக்கு 'எம் அண்ட் ஆர்' திட்டத்தில் ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கி ஆறு மாதங்களாகியும் மராமத்து பார்க்கவில்லை. இதுவரை மராமத்து பார்க்காமல் தண்ணீர் திறப்பதற்கு சில நாட்களுக்கு முன் பெயரளவில் பழுது பார்ப்பார்கள் என்பதால் முறைகேடுக்கு வாய்ப்புள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க வேண்டும் என்றார்.செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், ''விரைவில் பாசன கால்வாய்களை பழுது பார்க்கும் பணி துவக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ