உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லோக்சபா தலைமை கொறடாவாக சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமனம்

லோக்சபா தலைமை கொறடாவாக சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமனம்

புதுடில்லி : பா.ஜ., - எம்.பி.,யான சஞ்சய் ஜெய்ஸ்வால், லோக்சபா தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் நடந்த லோக்சபா கூட்டத்தில், பா.ஜ., - எம்.பி.,யான சஞ்சய் ஜெய்ஸ்வால், லோக்சபாவின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார்.மேலும், திலீப் சல்கியா, கோபால்ஜி தாக்கூர், சந்தோஷ் பாண்டே, கமல்ஜீத் செஹர்ராவத், தவல் லக்ஷமன்பாய் படேல், தேவுசின் சவுகான், ஜுகல் கிஷோர் சர்மா, கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி, சுதிர் குப்தா, ஸ்மிதா உதய் வாக், அனந்த நாயக், தாமோதர் அகர்வால், கோண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி, சதிஷக குமார் கவுத்தம், சஷாங்க் மணி மற்றும் முர்மு ஆகிய, 16 பேரை லோக்சபா கொறடாக்களாக பா.ஜ., நேற்று முன்தினம் நியமித்தது.இதற்கிடையே, லோக்சபாவில் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து ராகுல் பேசியதற்கு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்:எதிர்க்கட்சி தலைவராக ராகுலின் நடத்தை மற்றும் சட்டசபையில் அவர் பயன்படுத்தும் மொழி, லோக்சபா சபாநாயகர் பதவியை கேள்விக்கு உள்ளாக்குகிறது. மேலும், அவர் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் அவமதிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. ராகுல் தன் அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தை பகிரங்கமாக கிழித்தெறிந்த வரலாறு எல்லோரும் அறிந்தது.இதுவரை அவர் அரசியலமைப்பின் வரம்புகளை பின்பற்றியதற்கான எந்த சாட்சிகளையும் நான் பார்த்ததில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை